அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புகாரில், அவரின் முன் ஜாமின் மனு தள்ளுபடியானது. இந்நிலையில், விஜயபாஸ்கர் இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளதாகவும், கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.