முதுகுவலி காரணமாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் (72), டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென கடும் வலி ஏற்பட்டதால் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனை பழைய தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர் ரிமா தாதா, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.