எறும்புகள் உருவத்தில் மிகச் சின்னதாக இருந்தாலும், அதன் எடையை விட இருப்பது மடங்கு எடை கொண்ட இரை அல்லது உணவை தூக்கி செல்லும் ஆற்றல் கொண்டவை. இது மனிதனுடைய 1.5 டன் எடையை தூக்குவதற்கு சமம். பூமியில் தற்போது வாழும் மனிதர்களுடைய எடையில் சுமார் 20% அளவுக்கு எறும்புகளுடைய எடை உள்ளது. சகாரா பாலைவனத்தில் வசிக்க கூடிய “சகாரன் சில்வர்” என்ற எறும்பு இனமானது வினாடிக்கு 90 செ.மீ. தொலைவை கடந்து சென்றுவிடும் ஆற்றல் கொண்டது.