மும்பை ரயில் நிலைய வளாகத்திற்குள் 91 எலிகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ரயில் நிலைய பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு மத்திய ரயில்வே 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் எலி தொல்லை குறித்து பயணிகள் புகார் அளித்து வந்த நிலையில் ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பொருட்கள் வைக்கும் முறைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில் இறந்த நிலையிலும் உயிருடனும் எலிகள் கண்டெடுக்கப்பட்டன.