தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையான தேனி, கோவை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக காய்ச்சல் பரவ தொடங்கியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும். தேங்காய் சிரட்டை மற்றும் உடைந்த பானைகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பாதுகாக்கவும் அறிவுறுத்தியுள்ளது.