ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணைய தலைவர் பதவிக்கான வயது உச்சவரம்பு உயர்வுக்கான சட்ட மசோதாவை அமைச்சர் கயல்விழி, பேரவையில் தாக்கல் செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு 70ஆக இருந்த நிலையில், தற்போது 75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது