தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “இன்றைய தினம், உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா திரு. ஏசி சண்முகம் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. மருத்துவ சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர்கள் திரு. தீபக் சுப்பிரமணியம் மற்றும் திரு.மதன் ஆகியோரிடம் கேட்டறிந்தோம். புதிய நீதிக்கட்சியின் செயல் தலைவர் திரு. ஏ. ரவிக்குமார் மற்றும் ஏ.சி.எஸ். குழுமத் தலைவர் திரு. ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்” என தெரிவித்துள்ளனர்..