ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணங்களை 12 சதவிகிதம் முதல் 21 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த கட்டண உயர்வால், ஆண்டுக்கு ரூ.650 வரை அதிகமாக செலுத்த நேரிடும். வோடபோன் ஐடியா நிறுவனமும் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், நாளை முதல் அமலுக்கு வருகிறது.