உலக அளவில் மிகவும் பிரபலமான கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்லும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமல்லாமல் பல பொருட்களையும் செலுத்துகிறார்கள்.
அதன்படி காணிக்கையாக செலுத்தப்பட்ட மொபைல் போன்கள், கடிகாரங்கள் ஆகியவை வருகின்ற ஜூன் 24ஆம் தேதி மின்னணு முறையில் ஏலத்தில் விடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.