அனைவருக்குமான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சமூகத்தின் அனைத்து படிநிலைகளையும் இந்த பட்ஜெட் வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஏழைகளுக்கும் இளைஞர்களுக்கும் பலம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.