ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாக இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா, ஓசூர் ஆணையராக ஸ்ரீகாந்த், கடலூர் ஆணையராக அனு, சேலம் ஆணையராக ரஞ்சித் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய CEOவாக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.