பல்வேறு IAS அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக கார்த்திகா, ஜவுளித்துறை ஆணையராக ஜெயகாந்தன், மீன்வளத்துறை இயக்குநராக கெஜலட்சுமி, இந்துசமய அறநிலைத்துறை ஆணையராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளனர்.