ஐக்கிய அரபு அமீரகத்தில் கரு கலைப்பு செய்வது என்பது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் பெண்களுடைய சம்மதமின்றி அல்லது விருப்பமின்றி உடலுறவு வைத்து அதன் விளைவாக கரு உருவாகி இருந்தால், அதை கலைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டவுள்ளது.
கருத்தரித்து 120 நாட்களுக்குள் மிகாமல் இருக்க வேண்டும், கருக்கலைப்பு பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டுகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாணை வெளியான பிறகு இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.