ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தை பிடித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் பாண்டியா முக்கிய பங்கு வகித்திருந்தார். உலகக் கோப்பையில் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்து விளங்கிய பாண்டியா முக்கிய ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். பாண்டியா இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்.