உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் தனது மகளின் திருமணம் நெருங்கி வரும் நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் அவரை வெளியே அனுப்ப இயலாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையிடம் அனுமதி பெற்று ஐசியூவில் இருக்கும் தந்தை முன்பு திருமணம் செய்துள்ளார் மகள். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் மணப்பெண்ணை வாழ்த்தி வருகின்றனர்.