ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாஜகவோ, மோடியோ பிரதிநிதிகள் அல்ல என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராகுல், இந்து மதம் வெறுப்பை போதிக்கவில்லை எனவும், ஆனால், பாஜகவினர் 24 மணி நேரமும் வெறுப்பை மட்டுமே பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்