பீகாரில் ஹரிசங்கர் என்பவர் மின் கட்டணம் 500 ரூபாய் செலுத்தியும் வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு ரசீதை தரவிறக்கம் செய்து பார்த்தபோது இன்னும் கட்ட வேண்டிய தொகை 52.43 லட்சம் என இருந்ததை கண்டு அதிர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த தவறு நடந்துள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.