தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி – மத்திய அரசு மைனாரிட்டி மக்களுக்கு எதிரானவர்கள் எனவே இன்று மைனாரிட்டி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்றால் பீகார், ஆந்திரா எம்பிக்கள் ஆதரவு தேவை எனவே தான் அங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ் மக்களுக்கு நிதியுமில்லை, நீதியுமில்லை என விமர்சித்தார்.