மெக்சிகோவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு இளம் வயது சிறுவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு உணவு பாங்கு அவர்களின் தாய் வெளியே சென்று இருந்த நிலையில் தந்தையும் வேலை காரணமாக சென்றுவிட்டார். அந்த நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்த நிலையில் கரும்புகையை சுவாசித்ததால் சிறுவர்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர். இது உடற்கூறு ஆய்விலும் தெரியவந்துள்ளது. இந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.