தஞ்சை அரண்மனை வளாகம் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக் கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.
தற்போது சில காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலை சற்று உயர தொடங்கி இருக்கிறது. வரத்து குறைவால் இஞ்சி விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ இஞ்சி ரூ.170க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் இதை விட அதிகவிலைக்கு இஞ்சி விற்பனையானது.