தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு குறைந்த விலையில் அனைத்து பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளிலும் தக்காளியை விற்பனை செய்கிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் க்கும் மற்ற மாவட்டங்களில் 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அரசு சார்பில் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் 40 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.