தமிழகத்தில் ஜுலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது . அதன்படி ஜூலை மாதம் முதல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு புதிய கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, தமிழகத்தில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இல்லையாம்.