சவூதி அரேபியா ஹராத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எல்லைப் பகுதியான அல் பாட்டா வரை 256 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நேரான சாலை (146 கிமீ) என்ற சாதனையை சவுதி அரேபியா தற்போது முறியடித்துள்ளது. இந்த சாலை உலகின் மிக நீளமான நேரான சாலையாகும். இந்த சாலையில் வாகன ஓட்டிகள் 2 மணி நேரத்தில் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.