பித்தாபுரம் தொகுதிக்கு சென்ற ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், மாநில அரசு கடும் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருவதால் தனக்கு சம்பளம் தேவை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் நிதி இல்லாத நிலையிலும் முன்னாள் முதல்வர் ருஷி கொண்டாவில் அரண்மனை கட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.