விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதியில் வரும் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமகவை ஒரு போட்டியாளராகவே தங்கள் கட்சி கருதவில்லை என்று கூறியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தொடர்ந்து வெற்றி பெறுவதை சுட்டிக்காட்டிய அவர், இத்தேர்தலில் பாமகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் பாமக சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.