ஒரு வாரத்தில் கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய விஜய், விரைவில் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதி ஆக உள்ளார். மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலை தவிர்த்து, நேரடியாக 2026 சட்டசபை தேர்தலை குறிவைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அவரது கட்சிக் கொடி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.