சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகரப் பேருந்து ஆகிய மூன்று வகை போக்குவரத்தில் பயணம் செய்யும் வகையிலான புதிய திட்டம் டிசம்பர் மாதத்தில் அமலாக உள்ளது. இதற்காக பிரத்யேக செயலியை உருவாக்கும் பணி ஆணையை அரசு வழங்கியுள்ளது. முதலில் மாநகரப் பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பின், 2025இல் புறநகர் ரயில்களில் செயல்படுத்தப்பட உள்ளது.