ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 600 ரூபாய், கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து 6825 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது.