கடந்த 23ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுக்கு பின்னான ஒரே நாளில், அதானியின் சொத்து மதிப்பு ரூ.6,060 கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அவரது சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்த போதிலும், அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதேவேளையில், அம்பானியின் நிறுவனம் ரூ.9,200 கோடி இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.