ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நூறாண்டுக்கும் மேல் நடக்கிறது. இதில் இந்தியா முதலில் 1900 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் விளையாடியது. அதில் ஆங்கிலோ இந்திய வீரரும், நடிகருமான நார்மன் பிரிட்சார்ட் பங்கேற்று, தடைதாண்டுதல் ஓட்டப் போட்டிகளில் 2 வெள்ளி வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கங்களை பெற்று தந்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.