பாரீஸ் ஒலிம்பிக்ஸிற்கு சென்ற வீரர்களுக்கு வழங்கப்பட்ட உடைகள் வசதியாக இல்லை என இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் தனது X பக்கத்தில், ஆண்களின் உடைகள் எளிதில் கிழிந்து போகின்றன. ரவிக்கை பொருத்தமாக இல்லாததால் சேலையை அணிய பெண்கள் சங்கடமாக உணர்கிறார்கள். நம் கலாச்சாரத்தைக் காட்சிப்படுத்த வடிவமைப்பாளர் தவறிவிட்டார் எனப் பதிவிட்டுள்ளார்