நவீன கால ஒலிம்பிக்ஸ் தந்தையான பிரான்சை சேர்ந்த குபெர்டின் 1913இல் ஒலிம்பிக்ஸ் கொடியை உருவாக்கினார். அதில் வெள்ளை நிற பின்னணியில் 5 நிறங்களில் வளையங்கள் இருக்கும். அந்த வளையங்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களை குறிக்கிறது என்றும், அதிலுள்ள 6 நிறங்கள் ஒலிம்பிக்ஸில் விளையாடும் நாடுகளின் தேசிய கொடிகளில் இடம்பெற்றிருக்கும் வகையில் தீட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.