பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பாரிஸில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், மிட்பீல்டர் மன்பிரீத் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில், தமிழ்நாடு வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி:
கோல்கீப்பர்கள்:1. ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன்
பாதுகாவலர்கள்:2. ஜர்மன்பிரீத் சிங் 3. அமித் ரோஹிதாஸ்4. ஹர்மன்ப்ரீத் சிங் 5. சுமித்6. சஞ்சய்
மிட்ஃபீல்டர்கள்:7. ராஜ்குமார் பால்8. ஷம்ஷேர் சிங்9. மன்பிரீத் சிங் 10. ஹர்திக் சிங் 11. விவேக் சாகர் பிரசாத்
முன்னோக்கி:12. அபிஷேக்13. சுக்ஜீத் சிங் 14. லலித் குமார் உபாத்யாய்15. மந்தீப் சிங் 16. குர்ஜந்த் சிங்
மாற்று விளையாட்டு வீரர்கள்:17. நீலகண்ட சர்மா18. ஜுக்ராஜ் சிங்19. கிரிஷன் பகதூர் பதக்