பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை ஜியோ சினிமா ஓடிடி தளம் இலவசமாக ஒளிபரப்ப உள்ளது. வழக்கமாக சர்வதேச ரசிகர்களுக்காக எடிட் செய்யப்படும் காட்சிகள் தான் இந்தியாவிலும் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த முறை இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகளுடன் எடிட் செய்யப்படும் பிரத்தியேக காட்சிகள் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாக உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.