பீகாரைச் சேர்ந்த முன்னாள் பொறியாளர் கவுதம் ரஞ்சன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடைய வாகனத்தில் ஹாரன் அடிக்கவில்லை என கூறியுள்ளார். ஒலி மாசுபாட்டின் அபாயத்தை அறிந்ததும், வாகனம் ஓட்டும்போது ஹாரன் அடிப்பதை நிறுத்திவிட்டதாக அவர் கூறியுள்ளார். 2018ஆம் ஆண்டு ஒருமுறை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது வாகனத்தின் ஹாரன் ஒலியால் கடும் சிரமத்தை அவர் சந்தித்துள்ளார். அதனால் அப்போதில் இருந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.