ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க 6 முன்னாள் அமைச்சர்கள் இபிஎஸ்சிடம் வலியுறுத்தியதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அதுபோல இபிஎஸ்சிடம் யாரும் வலியுறுத்தவில்லை என்றும், அது திட்டமிட்டு பரப்பப்படும் மாயை என்றார். மூவரையும் அதிமுகவில் சேர்ப்பதை தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் கூறினார்.