ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்’ திட்டத்தின் கீழ் பணம் கொடுப்பதில் பல ஆண்டுகளாக முடிவெடுக்காததால், மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்னையை நவம்பர் 14-ஆம் தேதிக்குள் தீர்க்க வேண்டும். இல்லையெனில் ஓய்வூதியத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.