இந்தியாவின் புகழ்பெற்ற ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 18 ஆண்டுகால ஹாக்கி விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. 36 வயதான அவர், 3 ஒலிம்பிக் போட்டிகள் உள்பட பல காமன்வெல்த் போட்டிகள் மற்றும் உலகக் கோப்பை போட்டிகள் என 328 சர்வதேச போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்துள்ளார்.