கள்ளச்சாராய விவகாரத்தில் கடந்த ஓராண்டாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மரக்காணத்தில் 14 பேர் பலியான போதும் எப்படி தொடர்ந்து விஷச்சாராயம் விற்க அனுமதி அளிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனித உயிர்கள் தொடர்பான பிரச்சனை என்பதால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறியது. மேலும் தமிழக அரசு இவ்விவகாரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.