சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள, ‘கங்குவா’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் பெருமளவில் முடிவடைந்துவிட்டன. ‘கங்குவா’ படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘பான் இந்தியா’ என்ற ட்ரெண்டை ‘பான் உலகம்’ என மாற்றும் படமாக இது இருக்குமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், இந்தி உள்ளிட்ட 20 மொழிகளில் மட்டுமில்லாமல் போர்த்துகீஸியம் மொழியிலும் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் டப்பிங் வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன..