கங்கை மாதா என்னை தத்தெடுத்துள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மூன்றாவது முறையாக தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. காசிவால் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் அல்லாமல் நாட்டின் பிரதமரையும் தேர்வு செய்துள்ளனர். கங்கை மாதா என்னை தனது மடியில் ஏந்தி கொண்டார்.
இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கம் ஏழைகள் மற்றும் விவசாயிகளைப் பற்றியதுதான் என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 17 வது தவணையாக விவசாயிகளுக்கு ரூபாய் 20000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டார் பங்கேற்றனர்.