உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான திடீர் லாப வரியை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 6000 ரூபாயிலிருந்து 7000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. எரிபொருள் ஏற்றுமதி மூலம் அதிக லாபமடையும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்பு ஜூலை 16 இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.