கடலூர் பண்ருட்டி – அரசூர் சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கோகுல், பாரதி, லோகு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனை போலவே பரவலூர் – கோமங்கலம் சாலையில், பைக்கில் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்தில் பிரதீப் ராஜ், மணிமாறன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதனைப் பார்க்க அப்பகுதி மக்கள் கூடினர். அப்போது வேப்பூர் பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதியது. இதில் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.