சூப்பர் ஓவரில் தன்னை நம்பி கொடுத்த கேப்டன் சூர்ய குமாருக்கு வாஷிங்டன் சுந்தர் நன்றி தெரிவித்துள்ளார். கடின உழைப்பும் கடவுளின் ஆசீர்வாதமும் தன்னை சிறப்பாக செயல்பட செய்ததாக கூறிய அவர், சூப்பர் ஓவர் வீசும் நேரத்தில் அமைதியாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன் என தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவர் வீசிய அவர் இரண்டு ரன்களில் இலங்கையை ஆட்டமிழக்க செய்தார்.