கடைகளின் ஒவ்வொரு பெயர்ப்பலகையும் தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், அரசு விரைவில் பல்வேறு சட்டங்களை கையில் எடுக்க உள்ளது. அதற்கு முன்னதாகவே இந்த பணியை தமிழ்நாடு முழுவதும் வணிகர் பேரமைப்பு மேற்கொண்டு வருகிறது. முதல் வரி தமிழில் இருக்க வேண்டும். அதற்கு பிறகு ஆங்கிலத்தில் அல்லது வேறு மொழியில் வைத்து கொள்ளலாம். இதை மீறும் வியாபாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.