வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகை ரூ.5,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வணிகர் சங்க உறுப்பினர் நல வாரியம் மூலமாக 8,883 வணிகர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக கூறிய அவர், கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்குமாறும் அறிவுறுத்தினார். அத்துடன், இச்சங்கத்தில் புதிதாக 40,994 உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.