ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார். விஜயகாந்திற்கு கொடுக்கப்பட்டது போலவே அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கின் இணையரிடம் ராகுல்காந்தி பேச உள்ளார். யாராக இருந்தாலும் உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வந்த செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.