கட்சி உத்தரவை மீறி சுவாதி மாலிவால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தை ஆம் ஆத்மி எம்பிக்கள் இன்று புறக்கணித்து, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், கட்சியின் உத்தரவை மீறி சுவாதி மாலிவால் அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.