மெக்சிகோவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 சிறுவர்கள் ஒருவரையொருவர் கட்டி பிடித்துக்கொண்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேற்று இரவு உணவு வாங்குவதற்காக அவர்களின் தாய் வெளியே சென்றுள்ளார். தந்தையும் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருக்கிறார்.
அப்போது மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்தது. இதில் கரும்புகையை சுவாசித்ததால் சிறார்கள் நால்வரும் இறந்தனர். இது உடற்கூறு ஆய்விலும் தெரிய வந்ததுள்ளது. இந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.