மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டயம்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராமலிங்க மகன் சுரேஷ் என்பவர் மதுவுக்கு அடிமையானவர். இவர் நேற்று காலை கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் பலத்த காயமடைந்தார். உடனே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.